மே 31, 2020

உருளைக்கிழங்கில் ஐந்து வகை அறுசுவை உணவு.

உருளைக்கிழங்கில் ஐந்து வகை அறுசுவை உணவு.


5 கிலோ உருளைக்கிழங்கு வாங்கிக் கொள்ளவும்.


முதலில் 3 கிலோ உருளைக்கிழங்கை ஒரு குக்கரில் போட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.


3 பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு தக்காளிகளை பொடிசாக வெட்டி வைத்துக் கொள்ளவும். 


உருளைக்கிழங்கை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். 


மல்லிக்கீரை, புதினா, மிளகாய் இவை அனைத்தையும் நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


ஒரு கிலோ உருளைக்கிழங்கை மெல்லியதாகவும் வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும் இது நமக்கு உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்ய தேவைப்படும்.


ஒரு கிலோ உருளைக்கிழங்கு வட்டமாக வெட்டி பிறகு அதை நீளநீளமாக வெட்ட வேண்டும் இது நமக்கு பிரெஞ்ச் ஃப்ரை பண்றதுக்கு யூஸ் ஆகும்.


உருளைக்கிழங்கு பஜ்ஜிக்கு தேவையான மாவை நாம் ரெடி பண்ணலாம்.


அரை கிலோ கடலை மாவில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிறகு அதில் கொஞ்சம் மஞ்சள் பொடி, கொஞ்சம் வத்தல் பொடி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் காயப்பொடி போட்டு நன்றாக கலக்கி கொள்ளவும்.


தற்போது பஜ்ஜிக்கு தேவையான மாவு ரெடி ஆகிவிட்டது. அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். என்னை நன்றாக சூடானவுடன்.  இதில் நாம் வட்ட வட்டமாகவும், மெல்லியதாகவும் வெட்டி வைத்திருந்த உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து இந்த மாவில் நன்றாக முக்கி, கடாயில் போட்டால் சிறிது நேரத்தில் நமக்கு சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி ரெடி ஆகிவிடும். 


வட்டமாக வெட்டிய உருளைக்கிழங்கை நாம் பஜ்ஜி செய்து விட்டோம் தற்போது நீளநீளமாக வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை நாம் பிரெஞ்ச் ஃப்ரை செய்வதற்கு ரெடி பண்ணலாம்.


நீள நீளமாக வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கில் சிறிதளவு மஞ்சள் பொடி, கொஞ்சம் வத்தல் பொடி, கொஞ்சம் சீரகப்பொடி, கொஞ்சம் மிளகு பொடி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம்  கான்பிளவர் மாவு இவற்றை போட்டு நன்றாக விரவி கொள்ளவும்.


இப்ப பிரஞ்ச் ஃப்ரைக்கான எல்லாம் ரெடி ஆயிட்டு, இப்ப அதே கடாயில் எண்ணெய் நல்ல கொதிக்கும்போது நம்ம மிக்ஸ் பண்ணி வச்சிருக்கிற நீளமான உருளைக்கிழங்கை போட்டு பொரித்து எடுத்து விட்டால் நமது பிரெஞ்ச் ஃப்ரை ரெடி ஆகிவிடும்.


உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம். 


மூணு கிலோ உருளைக்கிழங்கை வேகவைத்து இருந்தோம். அதில் இருந்து ஒரு கிலோ உருளைக்கிழங்கை எடுத்து, நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.


பிறகு அதில் கொஞ்சம் பெருஞ்சீரக பொடி, கொஞ்சம் வத்தல் பொடி, கொஞ்சம் சிக்கன் மசாலா, கொஞ்சம் மிளகு பொடி. இதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கி வைத்துள்ள பல்லாரியையும், தக்காளியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்து, இவை அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளவும்.


இதனுடன் சிறிதளவு மல்லி இலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, சிறிதளவு நறுக்கிய மிளகாய் இவற்றை சேர்த்தவுடன் நமக்குத் தேவையான கட்லெட் பதம் ரெடியாகிவிடும். 


பிறகு இந்தக் கலவையை கட்லட்க்கு தேவையான அளவு உள்ளங்கையில் எடுத்து அதை நன்றாக வடிவமைத்து கொதிக்கும் எண்ணெயில் போட்டு எடுத்தால் நமக்கு தேவையான சுவையான கட்லெட் ரெடி ஆகிவிடும்.


இப்போது உருளைக்கிழங்கு போண்டா செய்வதற்கான முறையைப் பார்க்கலாம்.


ஒரு கிலோ வேக வைத்து மசித்து எடுக்கப்பட்ட உருளைக்கிழங்கில், சிறிதளவு கான்பிளவர் மாவு, கொஞ்சம் வத்தல் பொடி, கொஞ்சம் மிளகு பொடி, தேவையான அளவு உப்பு, கொஞ்சம் மஞ்சள் பொடி, இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். 


பிறகு இந்தக் கலவையில் இருந்து போதுமான அளவு எடுத்து உள்ளங்கையில் வைத்து முட்டை போன்று உருண்டையாக வடிவமைத்து கொதிக்கும் எண்ணையில் போட்டு எடுத்தால் நமக்கு சுவையான உருளைக்கிழங்கு போண்டா ரெடி ஆகி விடும். 


கடைசியாக நாம் செய்ய இருப்பது ஆலு டிக்கா. ஆலு என்றால் உருளைக்கிழங்கு டிக்கா என்றால் நல்ல உரப்பா பண்றது.


கையில் சிறிதளவு எண்ணெய் விட்டு அது நன்றாக சூடானதும் முதலில் வெட்டி வைக்கப்பட்ட பல்லாரியையும், தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். 


சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும், கொஞ்சம் மல்லி, புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும், கொஞ்சம் மஞ்சள் பொடி, கொஞ்சம் வத்தல் பொடி, இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும. 


பிறகு வேக வைத்த அந்த ஒரு கிலோ உருளைக்கிழங்கை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி அதில் போட்டு விரைவி எடுத்தால் ஆலு டிக்கா ரெடி ஆகி விடும். 


பிரண்ட்ஸ் இந்த ஐந்துவகை உருளைக்கிழங்கு உணவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பா இந்த போஸ்ட்க்கு கீழ இருக்கிற கமெண்ட் செக்சன்லே போயிட்டு உங்களோடு கமெண்ட்ஸ் தெரிவிங்க அது எங்களுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் தேங்க்யூ. 


2 கருத்துகள்:

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...