கறி சாப்ஸ்
தேவை :
சாப்ஸ் கறி -1/4 கிலோ (எலும்புடன் சேர்த்து பெரிய துண்டாக வாங்கவும்)
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 8 வெட்டியது
தேங்காய் - 1 முடி
இஞ்சி - சிறியது
பூண்டு - 4 பல்
முந்திரிப்பருப்பு - 15
உப்பு, மஞ்சள் - தேவையானது
செய்முறை :
பாதி தேங்காயில் பால் எடுக்கவும், மீதி தேங்காயை மேலே உள்ள மசாலா சாமான்களுடன் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலில் கலந்து கறியையும் போட்டு, உப்பு மஞ்சள் சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைக்கவும். பின் இரும்புச்சட்டியில் நெய் 2 கரண்டி நல்லெண்ணெய் 2 கரண்டி ஊற்றி, முந்திரிப்பருப்பு 9 பட்டை சிறிது, கிராம்பு 3 ஏலக்காய் 3 போட்டு தாளித்து, வெங்காயத்தை வதக்கி முதல் பாலையும் சேர்த்து ஊற்றி, குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக