ஜூலை 15, 2020

கற்றாழைப் பச்சடி

மருத்துவ உணவுகள்

கற்றாழைப் பச்சடி

கற்றாழைப் பச்சடி

தேவையானவை: 


கற்றாழைச் சோறு - 100 கிராம் (நன்றாகக் கழுவியது), 

வெல்லம் - 50 கிராம், 

கடுகு - அரை டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 1, 

நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன். 

செய்முறை: 


கற்றாழையில் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் நுங்கு போன்ற பகுதியை, நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, கற்றாழை சோறு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி, வெல்லம் உருகி பச்சடி பதம் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். மருத்துவப் பலன்கள்: 


வெயில் காலத்தில் உடல் வெப்பம் அதிகரிக்காமல் பாதுகாத்து, வறட்சியைத் தடுக்கும் உணவு இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...