சப்பாத்தி பூரி டிப்ஸ் (Chapathi Poori Tips)
மிருதுவான சப்பாத்தி, பூரி வேண்டுமா?
சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்து பாருங்கள்! மிருதுவாக வரும். அதே சமயம் டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்!
ஒன்று அல்லது இரண்டு நன்கு பழுத்த வாழைப்பழத்தை சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும் போது, மாவின் அளவுக்கு ஏற்றபடி சேர்த்து பிசையவும். வாழைப்பழத்தை சேர்ப்பதால் சுவை கூடும். வீட்டில் எல்லோருக்கும் பிடித்த மாதிரியான மிருதுவான சப்பாத்தி, பூரி கேரன்டி!
வாழைப்பழத்துக்கு பதில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து சப்பாத்தி மாவை பிசைந்தாலும் சப்பாத்தி மிருதுவாக வரும்.
குறிப்பு : வெதுவெதுப்பான நீர் சேர்த்து பிசைவதை பூரி செய்யும் போது முயற்சி செய்து பார்க்க வேண்டாம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக