ஜூலை 21, 2020

சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி?

சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி? | Sundakkai Vathal | Sundakkai Vathal Seivathu Eppadi | Amma Samayal


சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி?


சுண்டைக்காய் வத்தல் செய்வது எப்படி?

முதலாம் நாள்

சுண்டைக்காயை செடியில் இருந்து பறித்து.  ஒவ்வொரு காயாக தனித்தனியாக பிரித்து எடுத்து. நன்றாக கழுவி.  ஒவ்வொரு காயையும் மெதுவாக இடித்து.  பிறகு அதனுடன் சிறிதளவு தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு தேவைப்பட்டால் மிகச்சிறிய அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கிளறி.  இதை ஒரு நாள் முழுவதும் தயிரில் ஊற விட வேண்டும். 


இரண்டாம் நாள்

நல்ல வெயில் அடிக்கும் நேரம் பார்த்து காய வைக்கவேண்டும்.


மூன்றாம் நாள்

நன்றாக காய வைக்க வேண்டும். 


நான்காம் நாள். 

காய்ந்த சுண்டைக்காய் வத்தலை  எடுத்து நாம் பயன்படுத்தலாம்.சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்:

1. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, அது ரத்தக் குழாய்களில் படிவதைத் தவிர்க்கும் சக்தி இதற்கு உண்டு. ஆன்டி இன்ஃப்ளமேட்டரி குணங்கள் கொண்டது. வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.


2. இதில் உள்ள இரும்புச் சத்தானது ரத்த சோகையை எதிர்த்து போராடக்கூடியது. இரும்புச் சத்து என்றதும், கேழ்வரகு, கீரை போன்றவற்றையே நாடுவோருக்கு சுண்டைக்காயில் அது அதிகம் உள்ளது என்பது புதிய விஷயமாகும்.


3. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயை சேர்த்துக்கொள்வதன் மூலம் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிப்பதுடன் , காயங்களையும் , புண்களையும் ஆற வைக்கும்.


4. தையமின், ரிபோஃப்ளேவின், வாய் புண்களையும் சொத்தைப்பல் உருவாவதையும் தடுக்ககூடியது.


5. நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்ககூடியது. பார்வைத்திறன் அதிகரிக்கவும், நினைவாற்றல் கூடவும், இது உதவும்.


6. சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.


7. பிரசவமான பெண்களுக்கு பத்திய சாப்பாட்டின் ஒரு பகுதியாக ‘அங்காயப் பொடி’ என ஒன்று கொடுப்பார்கள். அதில் முக்கியமானதாக சேர்கக்ப்படுவதே சுண்டைக்காய்தான்.


8.தாய்ப்பால் சுரப்பை அதிகரித்து, செரிமான சக்தியைத் தூண்டி , உடலின் நச்சுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...