ஜூலை 22, 2020

கூட்டுப் பொரியல் சீக்ரெட்ஸ்

கூட்டுப் பொரியல் சீக்ரெட்ஸ் 

கூட்டு, பொரியல் செய்யும் பொழுது, உளுத்தம் பருப்பு, தனியா கலந்த பேஸ்ட் சேர்ப்பதற்கு நேரம் இல்லையா? சிறிதளவு ரசப்பொடி சேர்த்தாலும் அதே டேஸ்ட் கிடைக்கும். 


கோஸ் பொரியல் செய்யும்போது சிறிதளவு பால் சேர்க்கவும். கெட்ட வாடை வராது. பொரியலும் ருசியாக இருக்கும். 


முட்டைகோஸ் பொரியல் பிடிக்காதவர்களுக்கு எளிதாக கோஸ் துவையல் செய்யலாம். முதலில் கோஸை பொடியாக நறுக்கி வதக்கி கொள்ளவும். மிளகாய்,  உப்பு சேர்த்து அரைத்தால் துவையல் ரெடி! 

அவியலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பிறகுதான் அதில் தயிர் சேர்க்க வேண்டும். தாளிக்கக் கூடாது. 


புதினா சட்னி அரைத்து வைத்தால் சிறிது நேரத்தில் கருப்பு நிறமாக மாறிவிடும். இதைத் தவிர்க்க புளிக்குப் பதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும். 


காய்கறி பொரியல் மீந்துவிட்டால் அதைக் கொண்டு ஸ்டஃப்டு சப்பாத்தி ஸ்டஃப்டு தோசை செய்யலாம். பொரியலோடு தேங்காய் துருவலையும் சேர்த்து பிசைந்தால் கார கொழுக்கட்டை ரெடி 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...