பரிபூரணப் பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி - ஓர் ஆழாக்கு,
பாசிப்பருப்பு - அரை ஆழாக்கு,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு,
உப்பு - தேவையான அளவு,
சீரகம், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
அரிசி, பருப்பைக் களைந்துவைக்கவும். பிரஷர் குக்கரில் நல்லெண்ணெயைச் சூடாக்கி, அதில் பெருங்காயம், கடுகு பொரியவிட்டு, உளுத்தம்பருப்பு, சீரகம், கிள்ளிய மிளகாய், மிளகுத்தூளை சேர்த்து நன்கு வறுக்கவும். மஞ்சள்தூளை, கறிவேப்பிலை சேர்த்து, 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். கொதிக்க ஆரம்பிக்கும்போது, களைந்துவைத்த அரிசி, பருப்பு இரண்டையும் சேர்த்து, உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 3 விசில் வந்ததும் இறக்கி, அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும். இதற்குத் தொட்டுக்கொள்ளக் கெட்டித் தயிர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக