ஜூலை 16, 2020

இரத்தம் வதக்கல்

இரத்தம் வதக்கல்


 தேவை: 

ஆட்டின் இரத்தம் - 200 கிராம்

 எண்ணெய் - 2 தேக்கரண்டி

 பச்சை மிளகாய் - 6

 மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

 தேங்காய் - 1/2 முடி 

வெங்காயம், 50 கிராம்

 கறிவேப்பிலை -சிறிது 

 உப்பு -  தேவையானது 


செய்முறை : 

இரத்தம் உறைந்து இருக்கும். அதில் தண்ணீர்சேர்த்து நன்றாக பிசைந்து விட வேண்டும். பிசைந்தும் சிறு சிறு உருண்டைத் துண்டுகளாக இருக்கும் பின் தண்ணீரை வடித்து விட வேண்டும் வாணலியில் எண்ணை ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியதும் இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும். சீக்கிரம் வெந்து விடும். இறக்கும் போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும் இரத்தம் நிறம் மாறி இருக்கும் உளுந்தம் சுண்டல் மாதிரி  இருக்கும். இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தனியாகவும் சுண்டல் மாதிரி சாப்பிடலாம். 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...