ஜூலை 19, 2020

பிரண்டைத் துவையல்

பிரண்டைத் துவையல்


தேவையானவை: 

நறுக்கிய இளசான பிரண்டைத் துண்டுகள் - ஒரு கிண்ணம்,

உளுத்தம்பருப்பு - அரை ஆழாக்கு,

காய்ந்த மிளகாய் - 4, 

புளி - நெல்லிக்காய் அளவு, 

பெருங்காயம் - அரை டீஸ்பூன், 

உப்பு, 

இளசான கறிவேப்பிலை - கைப்பிடி, 

நல்லெண்ணெய் - கால் குழிக்கரண்டி. 


செய்முறை: 

இரும்புக்கடாயில் நல்லெண்ணெயை ஊற்றிக் காய்ந்ததும், பிரண்டையைப் போட்டு, நன்றாக வதக்கவும். எண்ணெயில் உளுத்தம்பருப்பு, மிளகாய், புளி, பெருங்காயம், கறிவேப்பிலையை ஒவ்வொன்றாகப் போட்டு, சிவப்பாகும் வரை வறுக்கவும். அதிலேயே, மீண்டும் பிரண்டையைப் போட்டு,  அம்மியில் மசிய அரைக்கவும். சூடான சாதத்தில், துவையலைப் போட்டுக் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். குறிப்பு: பிரண்டை நல்ல பிஞ்சாக இருக்க வேண்டும். முற்றலாக இருந்தால் நாக்கு அரிக்கும். சக்கை சக்கையாக இருக்கும். 


மருத்துவப் பலன்கள்: 

எலும்பு முறிவு வைத்தியத்துக்கு, பிரண்டை நல்லது. மூலநோய், ஆஸ்துமா, பசியின்மை, அஜீரணம், இருமல் பிரச்னை இருந்தால் பிரண்டையை சமையலில் சேர்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...