அஷ்டாம்சக் கஞ்சி
தேவையானவை:
கோதுமை,
கழுவிக் காயவைத்த கேழ்வரகு,
பொட்டுக் கடலை,
பார்லி அரிசி,
ஜவ்வரிசி,
பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு,
கசகசா - கால் ஆழாக்கு,
ஓமம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.
மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக