ஜூலை 19, 2020

எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி வர என்ன செய்ய வேண்டும்?

இட்லி தோசை டிப்ஸ் (Idli Dosa Tips) 

எப்பொழுதும் ஒரே மாதிரியான இட்லி வர என்ன செய்ய வேண்டும்? 


இட்லி தயாரிக்க எளிதானது, ஆனால் எல்லா நாளும் சாப்டாக வருவதில்லை. சில நாள் மிருதுவாக இருக்கும் சில நாள் கல் போன்று வரும். எல்லா நாளும் ஒரே மாதிரியாக வர இட்லிமாவுக்கான சரியான அளவு மற்றும் செய்முறை இதோ! 


தேவையான பொருட்கள் :


இட்லி அரிசி(5 கப்), 

உளுந்து (1 கப்), 

வெந்தயம் (2 டேபிள் ஸ்பூன்), 

கல் உப்பு (தேவையான அளவு). 


  1. அரிசி தனியாகவும், வெந்தயம் தனியாகவும் 4 மணி நேரம் ஊற வேண்டும்.


  1. மாவு அரைப்பதற்கு ஒன்னரை மணி நேரத்துக்கு முன்னால் உளுந்தை ஊற வைத்தால் போதுமானது. 


  1. முக்கிய விஷயம் அரிசி, உளுந்தை ஊற வைப்பதற்கு முன்பாக தண்ணீரில் நன்றாகக் அலசிவிட்டு ஊற வைக்கவும்.  ஊறிய பிறகு அலசினால் சத்து குறைந்து விடும்.


  1. அரைக்கும் பொழுது முதலில் வெந்தயத்தை உளுந்துடன் சேர்த்து அரைக்கவும். 


  1. உளுந்து அரைக்கும் பொழுது தண்ணீர் அதிகம் இருக்கக் கூடாது அதேபோல குறைவாகவும் இருக்கக் கூடாது! 


  1. கடைசியாக இட்லி அரிசியை அரைத்து அதை உளுந்து மாவுடன் சேர்த்து கலக்க வேண்டும். 


பொருட்களின் அளவு, ஊறவைக்கும்நேரம், செய்முறை மாறாமல் பார்த்துக் கொண்டால் ஒரே மாதிரியான இட்லி கியாரண்டி !!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...