சாதம் சீக்ரெட்ஸ்
வெரைட்டி ரைஸ்
கிளறுவதற்கு முன் சூடான சாதத்தில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றிக் கிளறவும். கிளறிய சாதத்தை ஆறவைக்கவும். சாதம் உதிரி உதிரியாக வரும். இந்த சாதத்தை பயன்படுத்தி எலுமிச்சை சாதம், புளிசாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம் போன்ற விதவிதமான கலவை சாதங்களை எளிதாக செய்யலாம்.
ருசியான எலுமிச்சை சாதம்:
சிறிது தனியா, 2 காய்ந்த மிளகாய் இரண்டையும் சிறிது எண்ணெய் கலந்து வானொலியில் வறுக்கவும். ஆறிய பிறகு பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை சாதத்தில் தூவிக் கிளறினால் ருசி அபாரமாக இருக்கும் .
சுவையான தேங்காய் சாதம் :
சிறிதளவு எள்ளை வறுத்து அதை பொடி செய்து தேங்காய் சாதத்தில் கலந்தால் சாதம் சூப்பராக இருக்கும்.
டேஸ்டியான புளி சாதம் :
சிறிது மிளகு, சீரகம், வெந்தயம், கடலைப்பருப்பு நான்கையும் வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை, புளிக்காய்ச்சல் உடன் தூவி, சாதத்தில் கொட்டிக் கிளறினால் சப்புக் கொட்ட வைக்கும் புளி சாதம் தயார் !
சிறிதளவு நெய்யில், வேப்பம்பூவை வறுத்து அத்துடன் கொஞ்சம் உப்பு சேர்த்து தினசரி சாதத்தில் சாப்பிட்டு வந்தால் நோய், நொடி அண்டாது.
சாதம் மீந்துவிட்டால் வடாம் செய்வது ஈஸி!
அதற்கு கொஞ்சம் ஜவ்வரிசியை வெந்நீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், பெருங்காயம், உப்பு மூன்றையும் விழுதாக அரைக்கவும். வெந்நீரில் ஊற வைத்த ஜவ்வரிசியுடன், அரைத்த விழுதை சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். 4 விசில் வந்ததும் குக்கரை இறக்கி அதில் மீந்து போன சாதத்தை கொட்டி, நன்கு கிளறி பிளாஸ்டிக் பேப்பரில் கிள்ளி வைத்து வெயிலில் காய வைத்து எடுத்தால் சூப்பரான வத்தல் ரெடி !
அரிசி கழுவிய நீரை முகத்திலும் கையிலும் தடவிவந்தால் முகம் பொலிவு பெறும். முகத்திலும் கைகளிலும் உள்ள சுருக்கங்கள் மறையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக