நவதானிய அடை
தேவையானவை:
(சூரியன்) கோதுமை,
(சந்திரன்) அரிசி,
(செவ்வாய்) துவரம் பருப்பு,
(புதன்) பச்சைப்பயிறு,
(வியாழன் - குரு) கொண்டைக்கடலை,
(வெள்ளி - சுக்ரன்) மொச்சை,
(சனி) எள்ளு,
(ராகு) கறுப்பு உளுந்து,
(கேது) கொள்ளு.
இந்த ஒன்பது தானியங்களும் தலா ஒரு கைப்பிடி,
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 5,
இஞ்சி - ஒரு பெரிய துண்டு,
மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு,
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முந்தைய நாள் இரவே நவ தானியங்களையும் ஊறவைக்கவும். ஊறவைத்த தானியங்களை, எண்ணெய் தவிர்த்து மற்ற பொருட்களோடு சேர்த்து, தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். இந்த மாவை, தோசைக்கல்லில், அடையாக வார்த்து, இருபுறமும் நல்லெண்ணெய் ஊற்றி வேகவிடவும். அடையின் நடுவில் துவாரம் செய்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, மொறுமொறுவென்று பொன்னிறமாக எடுக்கவும். இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டுச் சாப்பிட்டால்... அருமையாக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்:
நார்ச்சத்து மிக்க உணவு. எடை கூடுவதைத் தடுக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக