ஆகஸ்ட் 13, 2020

ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)

ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)

தேவையான பொருட்கள்

2 பட்டை

2 லவங்கம்

2 ஏலக்காய்

சிறிது வெந்தயம்

1 டீ ஸ்பூன் சீரகம் ரக பொடி

1/2 டீஸ்பூன் மிளகு தூள்

1/2 டீஸ்பூன் கரம் மசாலா

200 கிராம் வெங்காயம்

200 கிராம் தக்காளி

30 கிராம் மிளகாய் தூள்

30 கிராம் மல்லி தூள்

4 பச்சை மிளகாய்

சிறிது கொத்தமல்லி

2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

தேவைக்கேற்ப எண்ணெய்

தேவைக்கேற்ப உப்பு

சின்ன தலை ஆட்டு தலை கறி

செய்முறை


அடுப்பில் குக்கர் வைத்து சூடானதும் தேவையான நல்லெண்ணை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய்,வெந்தயம் போட்டு வெடித்தவுடன் நறுக்கியவெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும் வரை வதக்கவும் வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்த தலை கறியை சேர்த்து வதக்கவும். 


கறிவதங்கியவுடன் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரைவதக்கவும்.  வதங்கியவுடன் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா சீரக தூள் மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  குக்கரை மூடி ஒரு விசில் விட்டு  பதினைந்து நிமிடம் குறைவான தீயில் வைத்து  வேகவைக்கவும் கறிவெந்தவுடன் சிறிதளவு புளி கரைசல்  சேர்த்து கொதித்தவுடன் அரைத்ததேங்காய் சேர்த்து கொதித்தவுடன் கொத்தமல்லி சேர்த்து சூடாக பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...