நவம்பர் 16, 2020

வெள்ளை பைஜாமாவில் அசத்தல் லுக்கில் தனுஷ்.. மாமனாரைப் போல மருமகன்!

 மாரி2 திரைப்படத்தில் வரும் ரவுடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் பல சாதனைகளை செய்து வரும் நிலையில் இப்போது அச்சு அசல் ரஜினிகாந்த் கெட்டப்பில் தனுஷ் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று செம வைரலாகி வருகிறது.

வெள்ளை பைஜாமாவில் அசத்தல் லுக்கில் தனுஷ்.. மாமனாரைப் போல மருமகன்!

வெள்ளை பைஜாமாவில் அசத்தல் லுக்கில் தனுஷ்.. மாமனாரைப் போல மருமகன்!

கோலிவுட்டில் தனது அசுர நடிப்பால் அனைவரையும் அசர வைத்து விட்டு இப்போது பாலிவுட்டையும் கலக்கி வரும் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. இவ்வாறு தனது அசாத்தியமான நடிப்புத் திறமையால் பல அங்கீகாரங்களை வென்று உலக அளவில் பிரபலமாக உள்ள நடிகர் தனுஷ் இப்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் வரும் ரகிட ரகிட மற்றும் சமீபத்தில் வெளியான புஜ்ஜிமா உள்ளிட்ட பாடல்கள் இணையதளத்தை தெரிக்கவிட்டு இளசுகளின் மனதை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களது தீபாவளி புத்தாடைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் போல வெள்ளைப் பைஜாமா அணிந்து கொண்டு வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.இந்நிலையில் மாமனாரைப் போல மருமகன் என்ற சொல்லுக்கு இணங்க தனுஷும் ரஜினிகாந்தைப் போல வெறும் வெள்ளை பைஜாமா மட்டும் அணிந்து கொண்டு கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன், ரஜினிகாந்தைப் போலவே கையை ஸ்டைலாக வைத்துக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்குள் தலைவர் ரஜினிகாந்தை அப்படியே பார்க்கிறோம் என மகிழ்ந்து கூறி இந்த போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...