பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியும் பாலாஜியும் நெருக்கமாக இருப்பதும், அவர்களுக்குள் ஒரு காதல் ட்ராக் செல்வதும் ஊரறிந்த கதை.
என்னதான் ஷிவானியை தான் காதலிக்கவில்லை என்று பாலாஜி சொன்னாலும் அவர்களுக்குள்ளான நெருக்கம் குறையவில்லை.
அண்ணன் தங்கையாக ரொமான்ஸ்
ஷிவானியும் சரி பாலாஜியும் சரி ஒருவரையொருவர் பிரிவதே இல்லை. நேற்றைய டாஸ்க்கில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் அண்ணன் தங்கை கேரக்டர் ஆனால் அப்போதும் அவர்கள் தங்களின் ரோலை மறந்து ரொமான்ஸ் செய்து கொண்டிருந்தனர்.
இரண்டாவது புரமோ
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கேபிக்கும் பாலாஜிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இதில் கேபி, பாலாஜியிடம் நான் ஹானஸ்ட்டா பதில் சொல்லுன்னு சொன்னேன், நீ சொல்லிட்ட.. அதுக்குப்புறம் நான் ஒன்னுமே பண்ணலயே என்கிறார்.
தொடர்ந்து பேசும் ஷிவானியிடம் யார் சொன்னாங்களோ அவங்கக்கிட்ட போய் கேளு, என்கிட்ட வராதே என்கிறார் கேபி. அப்போது இருவருக்கும் இடையில் கையை நீட்டியப்படி சமாதானம் செய்கிறார் பாலாஜி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக