இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே இந்த சீசன் தான் ரசிகர்களிடையே மிகுந்த வெறுப்பை பெற்றுள்ளது.
மேற்கொண்டு சோதனையாக ஏற்கனவே விஜய் டிவியில் பார்த்து சலித்த முகங்களை தேடித்தேடி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
தொகுப்பாளராக ரியோவை ரசித்த ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டில் ரியோவை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர் என்பதை சமூக வலைதளங்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
சொம்பு சுப்பிரமணியமாக இருக்கும் ரியோவை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பங்கமாக கலாய்த்து வருவதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளாராம் அவரது மனைவி ஸ்ருதி.
சமீபத்தில்கூட ஸ்ருதி, தெரியாமல் ரியோவை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி விட்டேன் என புலம்பியது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக