செப்டம்பர் 14, 2021

அசர வைக்கும் அழகுக்கு இந்த 10 விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதுமே!

அசர வைக்கும் அழகுக்கு இந்த 10 விஷயங்களை தினமும் கடைபிடித்தால் போதுமே!

உச்சி முதல் பாதம் வரை அலங்கரித்துக் கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கென மெனக்கெட வேண்டுமே என்கிற சோம்பலும் ஒரு வகையில் அதை தடை செய்வதாக அமையும். மிக மிக எளிதாக வீட்டிலேயே, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, அன்றாட வாழ்வியலில் எப்படி நம்மை நாமே உச்சி முதல் பாதம் வரை அழகாக வைத்துக் கொள்வது? என்பதை தான் 10 குறிப்புகளாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

face11

குறிப்பு 1:

கூந்தல் பராமரிப்புக்கு நீங்கள் அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. தினமும் நீங்கள் குளிக்க செல்வதற்கு முன் சிறிதளவு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ளுங்கள். அதனை தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் 30 நிமிடம் வரை அப்படியே ஊற வைத்து குளித்தால் போதும், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு வேகமாக புதிய முடிகள் வளரத் துவங்கும். இதனால் அடர்த்தியும் அதிகமாகும்.

குறிப்பு 2:

உங்களுடைய கேசம் பட்டுப் போல மின்ன காசு கொடுத்து கெமிக்கல்கள் கலந்த கண்டிஷனர்களை பயன்படுத்துவதை விட வீட்டில் இருக்கும் தயிரை 10 நிமிடம் தலையில் தேய்த்து ஊற வைத்து தலைக்கு அலசினால் போதும், உடல் உஷ்ணமும் நீங்கி கூந்தல் சிக்கல்கள் இல்லாமல் பட்டுப் போல அலைபாயும்.

curd

குறிப்பு 3:

எப்பொழுதும் உங்கள் முகத்தில் எண்ணெய் வழிந்து கொண்டிருந்தால் இதை செய்யலாம்! ஒரு சிறு பவுலில் ஒரு டீஸ்பூன் பயத்த மாவு, அரை டீஸ்பூன் முல்தானி மட்டி, கொஞ்சம் சந்தனம் இவற்றுடன் காய்ச்சாத பசும்பால் சேர்த்து முகத்திற்கு பேக் போல போட்டு 10 நிமிடம் கழித்து உலர்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவினால் போதும். லிட்டர் லிட்டராக முகத்தில் எண்ணெய் வழிந்தாலும் எளிதில் முழுமையாக நீங்கி முகப்பொலிவு உண்டாகும். பருக்களை உண்டாக்கும் கிருமிகளும் ஒழியும்.


குறிப்பு 4:

கண்களை சுற்றி கருவளையமும், அயர்ச்சியும் இருப்பவர்கள் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களின் மேல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கலாம். இது எல்லோரும் செய்வது தான். வெள்ளரிக்காய் இல்லை என்றால் இதே போல தக்காளி மற்றும் தர்பூசணி கொண்டு செய்யலாம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி செய்யும் பொழுது கண்கள் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

water-melon-for-face

குறிப்பு 5:

முகத்தில் இருக்கும் முகப்பருக்களை அகற்ற மற்றும் நுண் துவாரங்கள் இறுக்கமாக என்னவெல்லாமோ நாம் செய்து பார்த்திருப்போம். அதை எதுவுமே இப்போது செய்ய வேண்டாம். நல்ல தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ஆவி பிடித்தால் போதும். முகத்தில் இருக்கும் துவாரங்கள் வழியே அழுக்குகள், தூசுகள், கிருமிகள் வெளியேறும். மேலும் தொண்டையில் தங்கி இருக்கும் கிருமிகள் தொந்தரவுக்கு சிறந்த மருந்தாகவும் அமையும். அழகுடன், ஆரோக்கியமும் கிடைத்து விடும்.

குறிப்பு 6:

அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். முகம் கழுவுகிறேன் என்கிற பெயரில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாதாரண தண்ணீரை கொண்டு வந்து அடிக்கடி கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். சோப்பு அதிகம் பயன்படுத்தினால் சருமம் வறண்டு போக வாய்ப்புகள் உண்டு.

steam

குறிப்பு 7:

வீட்டில் இருக்கும் தக்காளி, பீட்ரூட், மாம்பழம், பப்பாளி, திராட்சை, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, உருளை கிழங்கு, கேரட் ஆகிய எந்த காய்கறி மற்றும் பழ வகைகளை அரிந்தாலும் அதில் இருக்கும் ஒரு சிறு துண்டை ஜூஸ் போல செய்து ஐஸ் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். அந்த ஐஸ் க்யூப்கள் கொண்டு முகத்திற்கு மேலும் கீழுமாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் அதனுடைய சத்துக்கள் கிடைத்து முகமும் புத்துணர்வுடன் இருக்கும்.

குறிப்பு 8:

முகத்திற்கு தேவை இல்லாத கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வறண்ட சருமம் கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயுடன் சம அளவிற்கு கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொண்டு மென்மையாக முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்து கொடுத்தால் போதும். முகம் வறண்டு போகாமல் எப்போதும் ஈரப்பதத்துடன் சுருக்கமின்றி பொலிவுடன் இருக்கும்.

lip3

குறிப்பு 9:

உங்கள் உதடுகள் வறட்சியின்றி மென்மையாக இருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது வீட்டில் இருக்கும் சுத்தமான நெய் சிறிதளவு தடவினால் போதும் வறட்சியின்றி உதடுகள் மென்மையாக இருக்கும். உதட்டின் நிறம் மேலும் சிவப்பாக மாற அடிக்கடி பீட்ரூட் சாறை தடவி வரலாம்.

salt-water

குறிப்பு 10:

எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் கைகளும், கால்களும் சோர்ந்து காணப்படும். இதற்கு வீட்டிற்கு வந்தவுடன் ஒரு டப்பில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவிற்கு கல் உப்பு போட்டு அதில் காலையும், கைகளையும் பத்து பத்து நிமிடங்கள் வைத்து எடுத்தால் அயர்ச்சி நீங்கி புத்துணர்வு பெறும். மேலும் கை, கால்களில் இருக்கும் அழுக்குகள் நீங்கி நல்ல அதிர்வுகளை ஏற்படுத்தும்.

1 கருத்து:

  1. But if you're additionally into blackjack, for instance, you can to|you probably can} play Blackjack Early Payout, which comes with an incredible 99.5% RTP. Other available promos embrace reload bonuses, a sports 더킹카지노 welcome promo, and a poker bonus. Bovada has an excellent supply for brand spanking new|for model new} players, particularly those that use cryptocurrency. This electrical journey comes with multipliers that can significantly boost your winnings.

    பதிலளிநீக்கு

Cinemugam Posts

திருமண வயது வந்தும் சிங்கிளாக இருக்கும் நாயகிகள் யார் யார்- ஒரு லிஸ்ட்   அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் – முழு வ...