செப்டம்பர் 12, 2021

மூளை வறுவல்

தேவை: மூளை - 2 

சின்ன வெங்காயம் - 50 கிராம் 

சீரகம் - ¼ தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு


செய்முறை : 2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும். 50 கிராம் சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக்  கொள்ளவும். வாணலியில் இதயம் நல்லெண்ணெய் 8 தேக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் 1/4 தேக்கரண்டி சீரகம், நறுக்கிய வெங்காயம் இவற்றைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, இத்துடன் 1 தேக்கரண்டி மிளகுத்தூள் 2 தேக்கரண்டி மல்லித்தூள், சிறிது மஞ்சள் தூள், தேவையான உப்பு, சேர்க்கவும். கொதித்தபின், மூளைத்துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு சீக்கிரத்தில் நம்மை அண்டாது.

நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்க, 1 டம்ளர் பாலில் இந்த 4 பொருட்களை சேர்த்து குடித்தாலே போதும். நோய் தொற்று அவ்வளவு ...